ன்றளவும் உலக நாடுகளை தொல்லைப்படுத்தியும், லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும், பெருந்தொற்றான கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு இதே நாளில் (நவம்பர் 17, 2020) முதன்முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் சீன நபர் ஒருவருக்கு கண்டறியப்பட்டது.  உலக வரலாற்றில் கொரோனா எனும் பெருந்தொற்றை உலக நாடுகளுக்கு  பரப்பிய நாடாகவும் சீனாமீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், என்றும் 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெருந்தொற்று, , மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ்  என்றும், சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காண முடியவில்லை.

ஆனால்,  வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.  11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த நவம்பர் 17ந்தேதி முதன்முதலாக  கண்டறியப்பட்டது. இதையடுத்து,  இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கினர். உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தன.

இருந்தால், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில், பரவி உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதும், உலக பொருளாதாரத்தை சீர் குலைத்த நிலையில், அமெரிக்காவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா பெருந்தொற்றால், 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல, 1 கோடிக்கும் அதிகமானோரின் உயிரையும் குடித்துள்ளது. இந்த பெருந்தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் உலக நாடுகளும் மருந்து தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டாலும், தொற்று பரவலும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஓராண்டை நிறைவு செய்துள்ளது  வுகானின்  கொரோனா…

பொதுமக்கள் தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முக்கவசமும், அடிக்கடி கைகழுவுதலை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.