புதுடெல்லி:
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் குறித்து பேசிய சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அதிகரித்து வரும் கொரோனா பரவல் தற்போது சமூக பரவலாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தேசிய தலைநகரில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 115 கொரோனா மாதிரிகளில் 46 சதவிகிதம் ஓமிக்ரான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிய, வேகமாக பரவும் கவலையின் மாறுபாடு படிப்படியாக சமூக பரவலாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். டெல்லி மருத்துவமனைகளில் 200 கொரோனா நோயாளிகள் உள்ளனர் அவர்களில் 102 பேர் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

கொரோனா மற்றும் ஓமிக்ரான் வழக்குகளின் அதிகரிப்புக்கு மத்தியில் தேசிய தலைநகரில் கடுமையான “மஞ்சள் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது சரியான முடிவு என்றும் அவர் கூறினார்.

“நாடு முழுவதும் டெல்லி மட்டுமே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. டெல்லியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுபவர்களுக்கு நான் தெரிவித்து கொள்வது என்னவென்றால், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.