மும்பை:
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே சமூக வலை தளமான டுவிட்டரில் இன்று முதல் இணைந்துள்ளார். முதல் நாளிலேயே அவரை 7 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

மகாராஷ்டிரா தினம் ஆண்டுதோறும் மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராஜ்தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘இன்று மகாராஷ்டிரா தினம். இன்று தான் மராத்திகளுக்கு சொந்த மாநிலமும், மராத்தி மொழிக்கு அங்கிகாரமும் கிடைத்தது. இதற்காக பலர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இந்த நாளில் அவர்களை நினைவில் கொள்ள வேண்டும். நமது கடமைகளையும் உணரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த செப்டம்பரில் தான் பேஸ்புக்கில் இணைந்தார். இதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
Patrikai.com official YouTube Channel