மும்பை,

ந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 7ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரண்ட ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குவதால் ஐபிஎல் போட்டி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் வரும் ஏப்ரல் 7ந்தேதி தொடங்கும் ஐபிஎல் திருவிழா, இறுதி போட்டியும் அதே வானகடே மைதானத்தில் நடைபெறும் விதமாக போட்டி விவரங்கள் அறிக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள  வீரர்கள் பட்டியல் ஏற்கனவே  அறிவிக்கப் பட்டு உள்ள நிலையில், வரும் 27, 28-ம் தேதிகளில் ஏலம் மூலமாக வீரர்கள்  தேர்வு செய்யப்படுவர் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே 10 சீசன் முடிந்துள்ள ஐபிஎல் இந்த ஆண்டு தனது 11வது சீசனை தொடங்குகிறது. நேற்று நடை பெற்ற   ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் நடைபெறும் போட்டி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி,  ஏப்ரல் 7-ந்தேதி  தொடங்கி,  மே 27-ந்தேதி வரை சுமார் 62 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஐபில்-ன் தொடக்கப்போட்டியும்,  இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஐபிஎல் தொடரின் இரவு போட்டி இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபோல, மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டி இரவு 5.30 மணி அளவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இ மீண்டும் களம் இறங்குவதால் ஐபிஎல் போட்டியை காண  தமிழக ரசிகர்கள் விசில் அடித்து எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.