டில்லி

சீக்கியத் தலைவர் குருநானக் 550 ஆம் பிறந்த நாளையொட்டி ஏர் இந்தியா விமானத்தில் ஓம்கார் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

 

சீக்கிய மத நிறுவனரும் தலைவருமான குருநானக் 550 ஆம் பிறந்த நாள் விழாவை அரசு சிறப்பாகக் கொண்டாட உள்ளது.  அவருடைய நினைவிடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது.   அங்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பாதை திறப்பு விழா குருநானக் பிறந்த நாள் அன்று நடைபெறுகிறது.

 

இதையொட்டி அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் ஒம்கார் சின்னம் வரையப்பட உள்ளது.  சீக்கியர்களின் ஆன்மீக சின்னம் என இந்த ஓம்கார் சின்னம் கருதப்படுகிறது.   அத்துடன் விமானத்தில் உடல் பகுதியில் ”குருநானக் தேவ் 550 ஆம் வருட கொண்டாட்டம்” எனவும் பொறிக்கப்பட உள்ளது.

 

இவ்வாறு பொறிக்கப்பட்ட விமானம் வரும் 31 ஆம் தேதி முதல் அமிர்த சரஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்டான்ச்டெட் நகர் இடையே பயணம் செய்ய உள்ளது.   இந்த விமானம் வாரத்துக்கு மூன்று முறை மும்பை அமிர்த சரஸ் – ஸ்டான்ச்டெட் ஆகிய மார்க்கத்தில் செல்ல உள்ளது.