தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ….!

Must read

ஸ்ரீநகர் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  இதையடுத்து இன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: இன்று பிற்பகல் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை சீராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article