ஓமன் :  ஓமன் கடல்பகுதியில் விபத்துக்குள்ளான  எண்ணெய் கப்பலில் பணியாற்றியவர்களில் 8 இந்தியர்கள் உள்பட9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 6 பேரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொமரோஸ் நாட்டை  தனியாருக்கு சொந்தமான  பிரெஸ்டீஜ் பால்கன் (Prestige Falcon) எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது, ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓமனின் துகம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றி கொண்டு  வந்தது. இந்த கப்பலில் மொத்தம்16 பேர் இருந்த நிலையில், அவர்களில்  13 பேர்கள் இந்தியர்கள் எனவும் மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த எண்ணை கப்பலானது   ஜூலை-15ம் தேதி எண்ணெய் ஏற்றி கொண்டு வந்தபோது ஓமன் பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்தது. இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர மீட்பு படையினர், ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம்  அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் கப்பல் கவிழ்ந்ததால் அந்த கடற்பகுதி  முழுவதும் எண்ணை படலமாக காணப்பட்டது.

இதுகுறித்து கூறிய ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையத்தின் அதிகாரிகள் , கப்பல் “நீரில் மூழ்கி, தலைகீழாக” இருந்ததாகக் கூறினார், ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவில்லை. கப்பல் கவிழ்ந்த பகுதி ஓமானில் உள்ள துக்ம் மாகாணத்தில் விழுகிறது, அங்கு நாட்டில் ஒரு பெரிய தொழில்துறை துறைமுகம் உள்ளது.

இதற்கிடையில், அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.   இந்த மீட்பு பணியில்,  ஓமன் கடல்வழி பாதுகாப்பு மைய படையினருடன்,  இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக் (INS Teg) கப்பலும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, கப்பலில் சிக்கியவர்களில் இதுவரை 0 பேர் உயிருடனும் ஒருவர் உயிரிழந்த சடலமாகவும்  மீட்கப்பட்டு ள்ளனர்.  உயிருடன் மீட்கப்பட்டுள்ளவர்களில்  8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் . மேலும், காணாமல் போன எஞ்சிய பேரையும் தேடும் பணி தீவிரமாக இன்றும் நடைபெற்று வருகிறது.