ரியோடி ஜெனிரோ:
ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் ஹக்கி போட்டியில் இந்திய அணி 4-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது.
இது வரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களில் தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற கனடா – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் கனடா அணி தோல்வியுற்றது. மற்றொரு போட்டியில் ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதியது. இந்த ஆட்டம் (4-4) டிரா ஆனது.
எதிர்பாராத இந்த முடிவுகளின் காரணமாக இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இன்று கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதுகிறது. இதில் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. இன்று வெற்றி பெற்றால் பி பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதபோல் பெண்கள் ஹாக்கி அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி 3 தோல்வி, ஒரு டிராவுடன் ஒரு புள்ளியுடன் உள்ளது.
நாளை கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென் டினாவை எதிர்கொள்கிறது. இதில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதி போட்டிக்கு தகுத் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.