ரியோடி ஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கின் 2வது நாள் போட்டியில் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்குபெற்ற ஜிம்னாஸ்டிங் வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 8-வது இடத்தை பிடித்தார்.
இந்தியாவிலிருந்து ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இதில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை வரலாற்று சாதனை புரிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில், ஆண்கள் ஹாக்கி மற்றும் துடுப்பு படகு போட்டி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு ஆகியவற்றில் இந்திய வீரர்கள் அடுக்ககட்ட சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று டைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டியின் அன்ஈவன் பார் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மார்கர் அபாரமாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு நுழைந்தார். இது வரலாற்று சாதனை ஆகும்.
ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27-வது இடத்தை பிடித்துள்ளார்.
வால்ட் பிரிவில் தீபா கர்மார்க்கர் 14.850 புள்ளிகள் எடுத்து 8-வது இடத்தில் உள்ளார்.
அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகளும், பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகளும், ஃப்ளோர் பிரிவில் 12.033 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
ஜிம்னாஸ்டிக்கில் போல்ட் பிரிவிற்குள் 52 ஆண்டுகளுக்கு பிறகு நுழையும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் போட்டியில் பங்கெற்ற முதல் நபர் என்ற பெருமையை திபா கர்மாகர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.