டில்லி
முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் ஜாமீன் மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் முந்தைய ஒரு வழக்கின் தீர்ப்பு வாசகங்களை வெட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது.
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மோசமாக உள்ளதால் சிகிச்சைக்காக அவருடைய குடும்பத்தினர் அவரை ஜாமீனில் எடுக்க முயன்று வருகின்றனர்.
டில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்ததால் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் நிராகரித்தார். சிதம்பரத்தின் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட இந்த தீர்ப்பில் நீதிபதி கைட் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் வாசகங்களை வெட்டி இதில் ஒட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோகித் டண்டன் என்பவரின் ஜாமீன் மனு மீது அளிக்கப்படத் தீர்ப்பில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பின் அதே வாசகங்களை வெட்டி ஒட்டி உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இந்த வழக்கில் ரோகித் துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் போல் ஏற்கனவே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் இதற்கு முந்தைய ஜாமீன் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்ட அதே வாசகங்கள் வெட்டி ஒட்டப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.