க்னோ

ந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் தின் தொழில்நுட்ப அமைப்பு உறுப்பினருக்கு ஓலா டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் மிஸ்ரா லக்னோ நகரில் வசித்து வருகிறார்.   இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தீவிர தொண்டரான இவர் அந்த அமைப்பின் தொழில் நுட்பப் பிரிவை சேர்ந்தவர் ஆவார்.   கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ”நான் மோடியை ஆதரிக்கிறேன்” என ஒரு அணி ஆரம்பித்தார்.   அந்த அணிக்காக பிரதமரிடம் இருந்து விருது பெற்றுள்ளார்.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில் “நான் ஓலா கேப் புக் செய்திருந்தேன்.  ஓட்டுனர் இஸ்லாமியர் என்பதால் நான் அதை ரத்து செய்து விட்டேன்.  எனது பணத்தை நான் ஜிகாதி மக்களுக்கு அளிக்க மாட்டேன்” என பதிந்திருந்தார்.   இது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

 

இந்நிலையில் ஓலா நிறுவனம் இதற்கு பதிலடி பதிவை பதிந்துள்ளது. அதில், “நமது நாட்டைப் போல ஓலாவும் மதச் சார்பற்றது.   நாங்கள் எங்கள் ஓட்டுனர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரை சாதி, மனம், பாலினம் அல்லது சமய அடிப்படையில் பாகுபடுத்தி பார்க்க மாட்டோம்.  அதே போல எங்கள் வாடிக்கையாளர்களையும், ஓட்டுனர்களை ஒரே மாதிரியாக மதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்”  என பதில் அளித்துள்ளது.

ஓலாவின் இந்த பதிலை பாராட்டி பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர்.

அபிஷேக் மிஸ்ராவை டிவிட்டரில் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், மகேஷ் ஷர்மா உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும் பாஜக பிரமுகர்களும் பின் தொடர்வது குறிப்பிடத் தக்கது.