கத்தார்.
அரபு நாடுகள் கத்தார் நாட்டுடன் எல்லா உறவையும் முறித்துக் கொண்டதாக அறிவித்ததால் எண்ணை விலை உயரும் என அஞ்சப் படுகிறது
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரும்பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்று கத்தார்..
இன்று கத்தார் நாடு இஸ்லாமிய தீவிர வாதத்தை ஆதரிப்பதாக தெரிவித்து மற்ற அரபு நாடுகள் கத்தார் நாட்டுடன் தங்களின் உறவை முறித்துக் கொண்டுள்ளன.
இதன் விளைவாக கத்தார் நாட்டிலிருந்து வரும் கச்சா எண்ணெய் வரத்து நின்றுவிடும் என தெரிகிறது.
அதனால் உலகெங்கும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.
இந்த தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து பெட்ரோலியப் பொருள்களின் விலையும் ஏறக் கூடும் என அஞ்சப் படுகிறது.