2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கெளதம் மேனன் கைப்பற்றினார் .
பொன் ஒன்று கண்டேன் எனும் பெயரில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்தனர். அனால் எதோ காரணத்தால் கைவிடப்பட்டது .
பின்னர் A Studios LLP, A Havish Production, SP Cinemas, Madhav Media and Third Eye Entertainment இணைந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றனர்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஹரிஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஓ மணப்பெண்ணே என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டுவந்த நிலையில், படத்தின் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 22ஆம் தேதி ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
You are in for a treat 👩❤️👨
A complete family entertainer 💥#OhManapenne Streaming from 22nd October only on @DisneyPlusHS @iamharishkalyan @priya_Bshankar @KaarthikkSundar @idhavish @thespcinemas @madhavmedia @ThirdEye_Films @Composer_Vishal@krishnanvasant pic.twitter.com/c13uCVHnkn— Think Music (@thinkmusicindia) October 20, 2021