‘மாநாடு’ படத்துக்கு முன்பாகவே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
இதில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.


இந்நிலையில் தற்போது சிம்பு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், வரும் 26-ஆம் தேதி (திங்கட்கிழமை), பிற்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன், கையில் பேட்டை ஏந்தி மாஸாக நடந்து வரும் சிம்புவின் புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.