‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன், மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன் நடிக்க இருப்பதை படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சிம்புவின் என்ட்ரி வீடியோ வெளியாகி எஸ்டிஆர் ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.