மும்பை
தம்மைப் போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க அதிகாரிகள் முயலுவதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தின் போது போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப் பொருட்களை பயன்படுத்தியதாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைதாகினர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு இரு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மேல் முறையீடு மனுவில், ”போதைப் பொருள் வழக்கில் என்னைச் சிக்க வைக்க எனது வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்களுக்குத் தவறான அர்த்தம் கற்பித்து என்சிபி அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்.
அதிகாரிகள் என்னிடம் இருந்து போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றவில்லை. எனக்கு அர்பாஸ் மெர்சன்ட், ஆசித் குமாரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த வழக்கில் எனக்கு எதிராகச் சதி நடக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.