சென்னை:

யிரோடு இருக்கும் ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி, அவரது சொத்துக்களை சகோதரரே  தனது பெயருக்கு மாற்றி அனுபவித்து வந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு இருந்தவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநர காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் ரவிக்குமார் என்பவர், தான்  உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் வாங்கி, தனது சொத்துக்களையும் சேர்த்து, தனது சகோதரர் அபகரித்து கொண்டார் என்று புகார் அளித்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், தான் சென்னை சிட்லபாக்கம், 3-வது தெரு, ஜோதி நகரில் வசித்து வருவதாக தெரிவித்து உள்ளார்.  மேலும், `என் தந்தைக்கு சொந்தமான வீட்டில் என் சகோதரர் குடியிருந்துவருகிறார். கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டு வரி வசூலிக்க நகராட்சி ஊழியர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, என் தந்தையின் பெயரில் உள்ள வீட்டின் வரி ரசீதில் என் சகோதரரின் பெயர் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அதுதொடர்பாக நகராட்சி அலுவலகத்திலும் தாம்பரம் சார்-பதிவாளர் அலுவலகத்திலும் விசாரித்தேன்.  அதில்,  தனது தந்தையின் வீடு, எனது  சகோதரரின் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 2000ம் ஆண்டே  என்னைத் தவிர்த்து மற்ற வாரிசுகள் என் சகோதரருக்கு விடுதலைப் பத்திரமாக எழுதி கொடுதுள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், நான் இதுவரைக்கும் எந்தவித ஆவண பத்திரத்திலும் கையொப்பமிடவில்லை. ஆனால், இறந்து விட்டதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் ஒருவரிடமிருந்து ‘போலியாக இறப்புச் சான்றிதழ் வாங்கி, எனக்கு பாத்தியப்பட்ட தனது தந்தையின் சொந்தை, தனது சகோதரரே ஏமாற்றி பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு உள்ள ரவிக்குமார், இறந்து விட்டதாக தெரிவித்து  இறப்பு சான்றிதழ் வழங்கிய விவகாரம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.