டில்லி
அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்ததை எதிர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அளித்த தூர்தர்ஷன் அதிகாரி இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய செய்தி மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சகம் ஒரே நேரத்தில் கூட்டமாக பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து சமீபத்தில் உத்தரவிட்டது. இது குறித்து டில்லி தூர்தர்ஷன் செய்திச் சேனலில் இயக்குனராக பணி புரிபவரும் அதிகாரிகள் சங்க தலைவருமான சென்குப்தா பிரதமர் அலுவலகத்துக்கு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில்,”கூட்டமாக இந்திய தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சமீபத்தில் இந்திய செய்தி மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சகம் மொத்தமுள்ள 500 அதிகாரிகளில் சுமார் 140 பேரை இடமாற்றம் செய்துள்ளது. இதற்கு அமைச்சகத்தின் தவறான கருத்துக்களுடன் இந்த அதிகாரிகள் ஒத்துப் போகாததே காரணம் என சென்குப்தா குறிப்பிட்டிருந்தார்.
இன்று திடீரென அவர் திடீரென தூர்தர்ஷன் செய்தி இயக்குனர் பகுதியில் இருந்து நூல்வெளியிட்டுத் துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த இடமாற்றம் உடனடியாக அமுலுக்கு வருவது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.