சென்னை:
சிவில் டிபென்ஸ் அதிகாரி ராபியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 21 வயதே ஆன ஒரு காவல்துறை பெண் அதிகாரி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், காவல்துறை, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சமூக வலைத்தளங்களில் #justiceforsabiya, #justiceforsabiyasaifiஎன்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் நீதிகேட்டுப் போராடிவருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் டெல்லியில் 21 வயதே ஆன ஒரு காவல்துறை பெண் அதிகாரி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. கொடூர குற்றவாளிகளை விரைந்து விசாரித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.