வீட்டுக்கே சரக்கு டெலிவரி.. கூடவே கசப்பு மருந்தும்..
மதுபான கடைகள் மட்டுமே உடனடி வருவாய்க்கான ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்ட மாநில அரசுகள், கொரோனா பாதிப்பு குறித்து கவலைப் படாமல், சரக்கு கடைகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் மதுபான பாட்டில்களை வீடுகள் தோறும் சப்ளை செய்ய (ஹோம் டெலிவரி) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள், தினம் தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோம் டெலிவரி செய்யலாம்.
ஆயிரம் ரூபாய் வரை மதுபானம் வாங்கினால், டெலிவரி சார்ஜ், நூறு ரூபாய்.
அதற்கு மேல் கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு 500 ரூபாய் மது பாட்டிலுக்கும் 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
இன்னொரு கசப்பு மருந்தையும் ஒடிசா அரசாங்கம் குடிமகன்களுக்கு அளித்துள்ளது.
இன்று முதல் ’’கொரோனா சிறப்பு வரி’’ என்ற பெயரில் 50 % மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
– ஏழுமலை வெங்கடேஅன்