புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு முகவரி இல்லாத கடிமம் ஒன்று வந்துள்ளது. முழுமையான ஆங்கிலத்தில் விலாசமில்லாத அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த கொலையாளிகள் எந்த நேரத்திலும் தாக்கலாம். அவர்கள் முதல்வரை பின் தொடர்கிறார்கள். தயவுசெய்து இதுகுறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏ.கே .47 மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறி சில கார்களின் எண்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, டிஜிபி, புலனாய்வுத் துறை இயக்குநர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது.