புவனேஸ்வர்: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 15% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன் மொழிவை கடந்தாண்டு மாநில அமைச்சரவை வழங்கியது. அதனை தொடர்ந்து உயர் மட்ட குழுவை மாநில அரசு கடந்த ஜனவரியில் அமைத்தது.
இந்நிலையில் அக்குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை முதல்வர் நவீன் பட்நாயக் தாக்கல் செய்தார். இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.