திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அக்டோபர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளமான www.tirupatibalaji.ap.gov.inல் இன்று 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் அந்நாட்களில் தர்மதரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.