சென்னை: நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மைகல்வி அலுவலர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பர் 1ந்தேதி திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று (28ந்தேதி) அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இநத் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.