சென்னை: ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்ன. இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை, கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அறநிலையத்துறை தொடர்பாக இன்றைய பேரவை கூட்டத்தில் கொள்ளை விளக்க குறிப்பேடு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் இதுவரை ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 203 ஏக்கர் வேளாண் நிலங்களும் 170 கிரவுண்ட் அளவிலான காலி மனைகளும் மீட்கப்பட்டு திருக்கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.