சென்னை,

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து  அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில்  இரு தரப்பினரும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இரட்டை இலையை தற்காலிகமாக முடக்கியது.

இரு அணிகளும் இரட்டை இலையை பெற தங்களிடம் இருந்த ஆவனங்களை தாக்கல் செய்து வருகிறது. இதற்கிடையில் இரட்டைஇலையை தங்களது அணிக்கு பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே இரட்டை இலையை பெற ஓபிஎஸ் அணியினர் 20ஆயிரம்  பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தனர்.  இந்நிலையில் இன்று கூடுதலாக 12,600 பக்கம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்தப் பிரமாணப்பத்திரங்களை ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல்செய்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்றும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒருசில அமைச்சர்களின் பேச்சு காணமாகவும், ஒபிஎஸ் அணியினரின் நிபந்தனை காரணமாக இணைப்பு முயற்சி தடைபட்டது.

இந்த  நிலையில், பன்னீர்செல்வம் அணியினர் மேலும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பது பழனிசாமி அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.