Obamacare is ‘dead’ says Trump after healthcare victory
ஒபாமாகேர் என்கிற ஹெல்த்கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, ஒபாமாகேர் என்கிற ஹெல்த்கேர் திட்டத்தை ரத்து செய்வேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒபாமாகேர் திட்டத்தை ரத்து செய்து மற்றும் அதற்கு பதிலாக மாற்றுதிட்டத்தை கொண்டு வருவது குறித்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இதில் ஒபாமா ஹெல்த்கேர் திட்டத்தை நீக்குவதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 217 வாக்குகளும், எதிராக 213 வாக்குகளும் கிைடத்தது. இதையடுத்து ஒபாமா ஹெல்த்கேர் திட்டம் நீக்கப்பட்டு, புதிய சுகாதார ஒருங்கிணைந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ட்ரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
ஒபாமா கேர் திட்டத்திற்கு எதிரான மசோதா வெற்றி பெற்றதை அடுத்து ‘ஒபாமா ஹெல்த் கேர் டைடு’ (ஒபாமா ஹெல்த் கேர் திட்டம் ஒழிந்தது) என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]