நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கப் போகும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் சிகாகோவில் ஒபாமா தனது ஓட்டை போட்டுவிட்டார்.
obama_votting
நமது நாட்டைப்போல அமெரிக்காவில் தேர்தல் நாளுக்காக விடுமுறையெல்லாம் விடமாட்டார்கள். அல்லது அரசு ஊழியர்கள் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு போட்டுப்போடவும் முடியாது. எனவேதான் முன்னதாகவே ஓட்டுப்போடும் முறையை அங்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே ஓட்டுப்போடும் வசதியை இந்த வழிமுறை ஏற்படுத்தி தருகிறது. இந்த முறைக்கு “ஏர்லி ஓட்டிங்” என்று பெயர். இது மாகாணத்துக் மாகாணம் மாறும். சில மாகாணங்களில் ஓட்டுப்பதிவுக்கு 50 நாட்களுக்கு முன்னர் இது தொடங்கப்பட்டுவிடும். இந்த புதியமுறை இப்போது அங்கு பிரபலமடைந்து வருகிறது பலரும் இப்போதே தஙள் வாக்குகளை செலுத்த துவங்கிவிட்டார்கள்.
தமது குடியரசு கட்சியின் ஹிலாரி கிளிண்டனுக்காக வாக்கு சேகரித்துவரும் ஒபாமா. வாக்கு செலுத்தி முடித்தவுடன், யாருக்கு வாக்கு செலுத்தினீர்கள் என்று கேட்கப்பட்டபோது ஒரு கிண்டல் கலந்த புன்னகையுடன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.