அம்மா திமுக!: புதுக்கட்சி துவங்குகிறாரா ஓ.பி.எஸ்.?

ரவுண்ட்ஸ்பாய்:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் கட்சி துவங்க இருக்கிறாரோ என்கிற யூகம் பரவலாக எழுந்துள்ளது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நிர்வகிக்கும் ட்விட்டர் பக்கங்களில் இப்போது, “அனைத்திந்திய அம்மா திராவிடர் முன்னேற்ற கழகம்” என்ற வாசகம் காணப்படுகிறது. இன்று காலையில் இருந்துதான் பெரும்பாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, “ஓ.பி.எஸ். ஆதரவாளரான மைத்ரேயன் இன்று டில்லி சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும், சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லாது எனறு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாக கூறினார்.

அதே நேரம் இவர் புதிய கட்சியை பதிவு செய்யவும் சென்றருக்கலாம்” என்றும் சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது:

“தனக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காது என்று நேற்று இரவே ஓ.பி.எஸ்ஸுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்புகிறார். இந்த நிலையில், கட்சிக்காக எதிர் தரப்புடன் மோதுவதைவிட, தனிக்கட்சி துவக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார்” என்கிறார்கள்.

#   ஏதோ.. என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் ரவுண்ட்ஸ் அடிச்சு நியூஸ் போட்டுட்டேன்.!

: இங்ஙனம்,

உங்கள் ரவுண்ட்ஸ்பாய்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: o pannerselvam plan to start new party as amma dmk, அம்மா திமுக!: புதுக்கட்சி துவங்குகிறாரா ஓ.பி.எஸ்.?
-=-