சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கடந்த 8ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நிறைவு நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் முடியும் சமயத்தில் துணை முதல்வரும், அவை முன்னவரமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,‘‘ திமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி அடுத்து வரும் கூட்டத்தொடரில் பங்கேற்க பிரார்த்திக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து பேரவை நிகழ்வில் பங்கேற்க ஆசைப்படுகிறேன்’’ என்றார்.
இதை தொடர்ந்து சட்டசபை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel