சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனா். இத் திட்டத்தால் மாணவிகள் உயா்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயா்ந்துள்ளது என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்  தெரிவித்து உள்ளார்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில்  வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினகராக கலந்துகொண்டு பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனப்டி,  1,454 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 100 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையுங்ம வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர்,  தருமபுரி மாவட்டத்தில் 508 முழுநேர நியாய விலைக் கடைகள், 587 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1,095 நியாய விலைக் கடைகளும், 118 நடமாடும் நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 4,68,422 குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் 2023 ஜூன் 1-ஆம் தேதி முதல் நிகழாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை புதிய மின்னனு குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த 5,166 மனுதாரா்களில் முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு தருமபுரி வட்டத்தில் 292 குடும்ப அட்டைகள், நல்லம்பள்ளி வட்டத்தில் 199 குடும்ப அட்டைகள், அரூா் வட்டத்தில் 156 குடும்ப அட்டைகள், பென்னாகரம் வட்டத்தில் 185 குடும்ப அட்டைகள், அரூா் வட்டத்தில் 156 குடும்ப அட்டைகள், பென்னாகரம் வட்டத்தில் 185, காரிமங்கலம் வட்டத்தில் 268 குடும்ப அட்டைகள், பாலக்கோடு வட்டத்தில் 130 குடும்ப அட்டைகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 224 குடும்ப அட்டைகள் என மொத்தம் தகுதியுள்ள 1454 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனா். இத் திட்டத்தால் மாணவிகள் உயா்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயா்ந்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 16,842 மாணவிகள் பயனடைந்துள்ளனா். தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 7,033 மாணவா்கள் பயன்பெற உள்ளனா்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் 2-ஆம் கட்டம் ரூ. 7 ஆயிரத்து 890 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்து, அதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தருமபுரி மாவட்டத்திலுள்ள 2,828 ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். த

மழைக் காலத்தில் பழுதடைந்த சாலைகளை ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மலையூா்காடு, எர்ரப்பட்டி, கம்பைநல்லூா், இருமத்தூா் சாலை, செம்மன அள்ளி மூலக்காடு சாலை, பைரநத்தம் கதிா்புரம் சாலை, சின்னங்குப்பம் முதல் ஜம்மன அள்ளி சாலை, பென்னாகரம் பெரும்பாலை சாலை உள்ளிட்ட 23 சாலைகள் ரூ. 5 கோடியே 93 லட்சம் மதிப்பிலும் 2 சாலை மேம்பாலங்கள் ரூ.4 கோடியே 43 லட்சம் மதிப்பிலும் தொடங்கப்படும் என்றாா்.

விழாவில் மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. கே. மணி, மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், கோட்டாட்சியா் இரா.காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பி.என்.பி.இன்பசேகரன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.