புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேறிய முஸ்லீம்கள் எண்ணிக்கையில், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டில் 40% உயர்வு ஏற்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு சுமார் 40 முஸ்லீம்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர். ஆனால், கடந்தாண்டு தேர்ச்சிபெற்ற முஸ்லீம்களின் எண்ணிக்க‍ை 28 பேர் மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மொத்தமாக சிவில் சர்வீஸ் தேறியவர்களில், முஸ்லீம்களின் எண்ணிக்கை 4% என்பதாக இருந்தது. ஆனால், அது இந்தாண்டு 5% என்பதாக அதிகரித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு முதலே, சிவில் சர்வீஸ் தேர்வில், முஸ்லீம்களில் செயல்பாடு மேம்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ஒட்டுமொத்தமாக தேறியவர்களில், அவர்களின் எண்ணிக்கை 2.5% என்பது மட்டுமே.

கடந்த 2016ம் ஆண்டில் மொத்தமாக 50 முஸ்லீம்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 10 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர்.