டில்லி:

ந்தியா, பாகிஸ்தானில் இடையே இரு நாடுகளிலும் செயல்பட்டு வரும்  28 அணு சக்தி நிலையங்களின் பட்டியல்கள்  குறித்து பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த பரிமாற்றம்  நடைபெற்றுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு  வெளியுறவு அமைச்சகங்கள் சார்பில் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கனவே இதுகுறித்து இரு நாடுகளுக்கு இடையே 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி  ஒப்பந்தம் கையெழுத்திக,  1991-ம் ஆண்டு ஜனவரி 27-ம் அன்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டு தோறும், ஜனவரி 1-ம் தேதி அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகிறது.

முதன்முதலாக 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல்முறையாக பட்டியல் பரிமாறிக்கொள் ளப்பட்டது. இந்நிலையில் 28-வது ஆண்டாக இந்தப் பட்டியல் நேற்று பரிமாறிக்கொள்ளப்பட்டது.