வாஷிங்டன்:

டகொரியா மீது அணு ஆயுத தாக்குதல்  நடத்த அமெரிக்கா தயாராக  இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின்மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியாவின் ஐ .நா.சபைக்கான துணை தூதர் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக ஐ.நா. வ்டகொரியா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய வடகொரிய அதிபர் கிம்ஜாங், வடகொரியாவுக்கு  அமெரிக்கா இடையூறு செய்தால்,  அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்றும்,    அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் தன் மேசையின் மீது தயராக உள்ளதாகவும் வடகொரி அதிபர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்பும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்களுக்கான பொத்தான் இருப்பதாகவும் அது வடகொரியாவிடம் இருப்பதை விட மிகப்பெரிய, வலிமை மிக்க குண்டுகள் இருப்பதாகவும்  அவை  அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்  டிரம்ப்  எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.