டெல்லி

தேசிய தேர்வு முகமை தலைவர் நீட் முறைகேடு காரணமாக நீக்கப்பட்ட் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

இந்த குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை தொடக்கத்தில் மறுத்து வந்தது.  பிறகு இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதால். தேர்வில் முறைகேடு நடைபெற்றதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டார்.

மேலும் பேராசிரியர்களுக்கான நெட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அந்த தேர்வும் ரத்துசெய்யப்பட்டது.

நேற்று தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத் குமாரை திடீரென்று மத்திய அரசு நீக்கி தற்போது அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு தலைவரான பிரதீப் சிங் கரோலியாவுக்கு தேசிய தேர்வு முகமை தலைவர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.