டில்லி

ட்டவிரோதமாக குடி புகுந்தவர்களை வெளியேற்ற டில்லிக்கும் தேசிய குடியுரிமை பட்டியல் தேவை என டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறி உள்ளார்.

டில்லியில் உள்ள மோதி நகரில் வசித்து வரும் துருவ் தியாகி ஒரு சிறு தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தனது மகளுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தியாகியின் மகளான 19 வயதுப் பெண்ணை ஒரு சிலர் தெருவில் கேலி செய்துள்ளனர். இதை தியாகி கண்டித்துள்ளார். இதை ஒட்டி வாய்த் தகராறு ஏற்பட்டுள்ள்து. இதில் ஒரு 45 வயதுக் காரரும் அவரது 20 வயது மகானும் தியாகியை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர்.

இந்த கொலையை தடுக்க முயன்ற தியாகியின் 19 வயது மகனும் கத்திக் குத்தினால் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து கத்தியால் குத்திய தந்தை மகன் இருவருடன் அவர் மனைவி மற்றும் உள்ள மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபரின் இந்த கொலை டில்லி நகரில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி பாஜக தலைவரான மனோஜ் திவாரி கொல்லப்பட்ட தியாகியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மனோஜ் திவாரி, “நான் வன்முறையில் கொல்லபட்ட துருவ் தியாகியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் வாசிகளில் சிலர் இந்த கொலையை ரோகிங்கியா அல்லது வஙகதேச அகதிகல் செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சட்டவிரோதமாக குடிபுகும் மக்களால் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. நான் இது குறித்து காவல்துறை ஆணையரிடம் பேசி உள்ளேன். டில்லி நகருக்கு தேசிய குடியுரிமை பட்டியல் அவசியமாகும்.

கெஜ்ரிவால் அரசு சட்டவிரோதமாக குடி புகும் மக்களை கண்டுபிடித்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து மவுனமாக இருக்கிறார். அவர் அரசியல் காரணமாக இந்த சகிப்புத் தன்மையை கையாண்டு வருகிறார்.

தியாகியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்க டில்லி பாஜக தொடர்ந்து போரிடும். அவர் குடும்பத்தினருக்கு டில்லி அரசு தக்க இழப்பீடு அளிக்க வேண்டும். இந்த கொலையை அரசு எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி கையாண்டு கொலையாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தியாகியின் குடும்பத்துக்கு நீதி வழஙக் வேண்டும்” என கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]