புதுச்சேரி: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. யார் யார் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளனர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

திருபுவனை – கோபிகா

மங்கலம் – ஜெயகுமார்

உழவர்கரை – பன்னீர்செல்வம்

கதிர்காமம் – ரமேஷ்

இந்திராநகர் – ஆறுமுகம்

ராஜ்பவன் – லட்சுமி நாராயணன்

அரியாங்குப்பம் – தட்சிணாமூர்த்தி

ஏம்பலம் – லட்சுமி காந்தன்

நெட்டபாக்கம் – ராஜவேலு

பாகூர் – தனவேலு

நெடுங்காடு – சந்திர பிரியங்கா

காரைக்கால் வடக்கு – திருமுருகன்

மாஹே – அப்துல் ரகுமான்