புதுவை: இந்தியாவில் 5 மாநில தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள சூழலில், புதுச்சேரியில், பாஜகவுடன் இணைந்த முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் அணியே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராக உள்ளார் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் 16 இடங்களை வென்றால், புதுச்சேரியில் ஆட்சியமைக்கலாம் என்ற நிலை இருக்கையில், ரங்கசாமியின் அணிக்கு, குறைந்தபட்சம் 16 முதல், அதிகபட்சம் 24 இடங்கள்வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், திமுக+காங்கிரஸ்+விசிக+கம்யூனிஸ்ட்டுகள் ஒரு அணியாகவும், என்ஆர் காங்கிரஸ்+அதிமுக+பாஜக ஒரு அணியாகவும் போட்டியிட்டன. பாமக தேர்தலைப் புறக்கணித்தது.