அகமதாபாத்: கடந்த 3 ஆண்டுகளில், வங்கிகளின் வராக்கடன் விகிதம் 70% வரை அதிகரித்திருப்பதாக, வங்கியாளர் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்த நிலை வேறெங்குமில்லை. நமது பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில்தான்.
குஜராத் மாநில வங்கியாளர்கள் கமிட்டி அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த நிதியாண்டின் தொடர்ந்த காலாண்டில் இருந்த ஒட்டுமொத்த வராக்கடன் ரூ.34,563 கோடி. அது தற்போது 11.45% அதிகரித்து, 38,520 கோடி என்ற அளவில் நிற்கிறது.
கடந்த 2015-16ம் ஆண்டின் தொடர்ந்த காலாண்டில் இருந்த ரூ.22,659 கோடியைவிட, தற்போது 70% அதிகரித்துள்ளது.
அதாவது, கடன் வாங்கிய வங்கி வாடிக்கையாளர்களின் திரும்ப செலுத்தும் திறன், கடந்த சில ஆண்டுகளில் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
– மதுரை மாயாண்டி