டெல்லி: நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நவம்பர் மாதம் ஜிஎஸ்டியாக ரூ.1,04,963 வசூலாகி உள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ.19,189 கோடி ஆகும்.
எஸ்ஜிஎஸ்டி ரூ.25,540 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.51,992 கோடியாகவும் உள்ளது. செஸ் வரியாக ரூ. 8, 242 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் வசூலான தொகையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் ரூ.32,173 கோடி, மே மாதம் ரூ. 62,151 கோடி, ஜூன் மாதம் ரூ. 90, 917 கோடி, ஜூலையில் ரூ.4,87,422 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ. 86, 449 கோடி, செப்டம்பர் ரூ. 95, 480 கோடி, அக்டோபர் மாதம் ரூ. 1,05,155 கோடி வசூலாகி உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.