நெட்டிசன்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு

#Constitution Day-Nov26 #அரசியலமைப்புச்சட்டத்தின் தினம்

வம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. 26-11-2018 இந்திய அரசியலமைப்பு (Constitution Day) தினமாகும். 26-11-949அன்று இந்திய அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளை ஏற்று நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதிப்படுத்தப்பட்டு நமக்கு நாமே ஏற்றுக் கொண்ட நாள். 09-12-1946இல் இதற்கான வேலைகள் துவங்கப்பட்டு இன்றைக்கு (26-11-2018) இதே நாளில் ஏற்கப்பட்டது. மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும், வேட்கைகளையும் என அனைத்து எண்ணப்பாடுகளையும் ஒருமுகமாக பிரதிபலிப்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அன்றைய வைசிராய் லார்ட் மவுன்ட்பேட்டன் ஒருங்கிணைந்த இந்தியா என்பது தற்போதைய இந்தியாவாக பிரிக்கப்படுகிறது என்று 3-6-1947இல் அறிவித்தார். அதனால் இந்தியா தனக்கான அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் 296 உறுப்பினர்கள் அப்போது இடம் பெற்றார்கள். அப்போது அந்த குழுவில் டாக்டர். அம்பேத்கர் இல்லை. இவர்களில் கிழக்கு வங்கத்தை சார்ந்தவர் யோகேந்தரநாத் மண்டல் என்பவர் வெளியேறியதால் அவருடைய இடத்தில் அம்பேத்கர் இடம்பெற்றார். நமது அரசியல் சாசனம் சமஷ்டியா? ஒற்றை ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதை பி.என்.ராவ் என்பவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.

ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியல மைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ் மற்றும் முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜய லட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர். கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை. அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.


பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.
அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது. வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.

இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.

இதுகுறித்து பல பத்திகள் தினமணி, தி இந்து போன்ற நாளேடுகளில் எழுதியுள்ளேன். இருப்பினும் இதுகுறித்தான சிந்தனைகளையும், பிரச்சனைகளையும் இந்த ஒரு பத்தியில் அடக்கிவிடமுடியாது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், எனக் கொண்ட பன்மையில் ஒருமை என்ற அடிப்படையில் பல வட்டாரங்கள் இணைந்து வாழ்கின்றோம்.

சமஸ்டி அமைப்பின் வேகத்தையும் தாக்கத்தையும் மத்தியில் ஆளும் மத்திய அரசு உணரவேண்டும்.

மாநிலங்களுக்கிடையே பாரபட்சமில்லாமல் சம உரிமைகளோடு, மாநில சுயாட்சி பெற்றிடும் வகையில் நம்முடைய பணிகளும், நம் அணுகுமுறைகளும் இருக்கவேண்டும்.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இந்திய #அரசியலமைப்புசட்டத்தை வடிவமைத்து உயிரோட்டமான ஜீவனாகநாட்டுக்கு அர்ப்பணித்தார் !

#இந்தியஅரசியலமைப்புசட்டம் வெறும் எழுத்து வடிவம் இல்லை நம்முடைய உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிபடுத்துகின்ற பிரகடனமாகும் .

இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை பல நாள் அமர்ந்து விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தி வடித்தெடுக்கப்பட்ட அரசியல் சிற்பம் தான் நம் அரசியல் சாசனம்

டாக்டர் அம்பேத்கரோடு இணைந்து அந்திராவை சேர்ந்த அறிஞர் பி.என்.ராவ் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரசியல் அமைப்பு சட்டங்களை எல்லாம் அறிந்துகொண்டு அதை நம்நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் செய்து இந்திய அரசியல் சாசனம் எழுத பெரும் பங்காற்றினார்!

அவர் இல்லையென்றால் பெரும் சிரமம் ஏற்பட்டு இருக்கும் திரு பி.என் ராவ் அவர்கள் மறைக்கப்பட்ட மாமனிதர்களில் ஒருவராவார்

இந்நாளில் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை நாட்டுக்கு தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் திரு பி.என். ராவ் அவர்களையும் நினைவு கூறுவோம் !

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-11-2021

#KSRadhakrishnan_postings
#KSRpost
#Constitution_Assembly
#இந்தியஅரசியலமைப்புச்சட்டம்

CONSTITUTION DAY – 26 NOVEMBER
————————–
THE NATION’s CONSCIENCE
AS INDIA CELEBRATES ITS 1ST CONSTITUTION
DAY, A THROWBACK TO THE EARLY YEARS
The Constitution of India was handwritten and calligraphed in both
English and Hindi — not typeset or printed. The original copies are kept in a special helium-filled case in the library of the Parliament.
No foreign consultants were involved in framing it. The founders were adamant that Indians should have full control over the drafting
procedure. Thus, the assistance of several lawyer-members were
sought: Nehru, Prasad, Ambedkar, and Alladi Krishnaswami Ayyar were part of the historic draft.
It consists of 90,000 words besides illustrations of events
from Indian history by Nandalal Bose of Santiniketan and others
284 members of the Constituent Assembly (including 15 women)
signed the hand-written document on January 24,1950. It came
into force two days later.
By the time the Assembly convened for its final session
in January 1950, Rajendra Prasad had been elected
as India’s fi rst President.After members of the Assembly
signed the document — with Nehru being the first —
Prasad decided that he also must sign. And he chose to
insert his name in the space between the last line of the text
and Nehru’s signature.
The Constituent Assembly took two years, eleven months
and seventeen days to draft the document after the drafting panel
submitted it to them.
The Indian Constitution is the longest in the world,with 44 articles, 12 schedules and 100 amendments. The American constitution
is the shortest.
India’s constitution has been hailed as one of the world’s
best Constitution,especially since it has only seen 100 amendments so far.
The Constitution has borrowed several features from other
constitutions. The concepts of Liberty, Equality and Fraternity were
taken from the French constitution, the concept of 5-year Plans from
the USSR and the Directive Principles from Ireland
————————————————————————————
Constitution is sublime, failings are of our own making
As a college student, I remember hearing a speech by the legendary Palkhivala on what he called “the Sublime Constitution”.
There can be no doubt that the epithet coined by him was
anything but fully deserved. The government’s decision to characterise November 26 as Constitution Day is a remarkable step — albeit a token of gratitude which this nation owes to one who can fairly be called the principal architect of the Constitution.
The framing of the Constitution was a painstaking exercise. On August 29, 1947 the Constituent Assembly appointed a
drafting committee (B R Ambedkar was chairman) which presented a draft in February 1948. This draft was discussed and altered and finally adopted by the Constituent Assembly on November 26,
1949. The Indian Constitution drew upon models in countries such as the US, Australia, Canada, Ireland, but crafted its own architecture. Ambedkar in his speech to the Constituent
Assembly quoted the powerful words of Grote [the Greek historian] “…
The diffusion of constitutional morality….
Is the indispensable condition of government at once free and peaceable…Since even any powerful and obstinate
minority may render the working of a free institution impracticable even without being strong enough to conquer ascendancy
for themselves.” With his characteristic bluntness
Ambedkar said: “Constitutional morality is not a natural sentiment. It has to be cultivated. We must realise that our people
have yet to learn it. Democracy in India is only a top-dressing on an Indian soil, which is essentially undemocratic.” We are no longer an infant democracy— 65 years is a fairly long time in the life of a nation, sufficient to assess whether we have imbibed constitutional morality, in sufficient measure. India has had its share of problems, the biggest being the economic non-inclusiveness of nearly
1/3rd of its population. Sociologically, we continue to let caste and religion divideus. Gender justice is a distance away.
India is the perfect social cauldron where strife could be a way of life. Add to this mix the freedom of speech and a media
driven by popularity ratings — there’s hardly any surprise that on its surface India has started to appear as an intolerant society. But the gains of six decades of democracy should never be underestimated.The biggest success of Indian democracy
has been its ability to sustain the system of a popular government — the experiment of 1975 and its aftermath has hopefully dispelled any fantasies of dictatorship harboured by any political leader.
The second has been that, despite populist attempts at dismantling the basic freedoms as a ruse to usher in a socialist order, we have maintained the fundamental freedoms engrafted in the Constitution
— the gift of freedom for which our forebears took on the might of the British Empire and sacrificed their lives. An adjunct of this is that the Supreme Court in particular, and judiciary generally, is considered perhaps the world’s most powerful institution of its kind.
Barring certain aberrations, SC has been at the forefront of the battle to preserve these freedoms, using judiciously its power
to enforce constitutional rights and fundamental freedoms even if it meant overriding popular sentiment. The SC has been proactive in attempting to make constitutional rights a living reality even
for those who do not have the resources to seek redress of the judicial system, and to use these as a weapon to address executive
and legislative lethargy. Ambedkar, in his speech in the constituent
assembly on November 4, 1948, expostulated the features of the draft Constitution. He explained the relative strengths and weaknesses of the Presidential form of government and the
Westminster form of democracy. He said a democratic executive must satisfy two conditions — it must be a stable executive
and it must be a responsible executive. The presidential forms impart greater stability but lesser responsibility as the
executive isn’t dependent for its existence on a majority in Congress. The British system imparts greater responsibility
because of an executive dependent on Parliament for its existence, but this is at times at the cost of stability. It isn’t that the former is unaccountable — it’s the degree of accountability and its pervasiveness that differs in the two systems.
By this touchstone, Indian democracy is clearly work in progress. The lack of stability in government inherent in the Westminster system has taken its toll — coalition politics has seen national interest being sacrificed for political stability — the need for consensus has been seen to constrain ambitious economic measures.Constitutional morality is another area which is shown
up in grey light.Some areas of dismal failure are criminalisation
of politics, radicalisation and intolerance, populist measures that
fester the caste divide, and, most of allegregious, corruption. We replace governments every five years, unfortunately
each government uses the same red beacons to torment the common man.And when all else fails, we blame the
Constitution. Amendments to the Constitution have been made designed to emasculate the courts and make our fundamental
freedoms subject to the whim and caprice of those in power, on the excuse that it was the fundamental rights that prevented removal of poverty.Such attempts are now dust on the shelves of history. No government in present times would dare tinker with the basic values enshrined in the Constitution. In a broadcast on the Cabinet Mission plan in 1946, Lord Wavell had in prophetic
words said “… No country and no form of government can work satisfactorily without goodwill; with good will and determination to succeed even an apparently illogical arrangement can be made
to work….” Our Constitution is truly sublime – if there have been any failings we have only ourselves to blame.
Harish Salve is former solicitor general of India
——————————————————————————–
How we codified what India stands for
WHEN DID THE PROCESS OF DRAFTING INDIA’S CONSTITUTION BEGIN?
In 1934 Indian leaders demanded a constituent assembly to draft a Constitution reflecting the ideals of an independent India,
the process began more than a decade later. The constituent assembly first met on December 9, 1946 in the Central Hall of
Parliament, then called Constitution Hall; more than 200 representatives attended, including nine women. Sachchidananda
Sinha was elected temporary chairman, to be soon replaced by Rajendra Prasad.
How was the assembly constituted? Constituent Assembly
members were chosen mainly through indirect election by provincial assemblies, as per Cabinet Mission recommendations. 292 members were elected through provincial assemblies, 93 represented princely states and four represented chief commissioners’ provinces, including the Northwest Frontier Province, Balochistan, Coorg, Ajmer-Merwara, Andaman and Nicobar. Total membership: 389. How did it function? On December 13, 1946, Nehru moved the ‘Objectives Resolution’ stating the assembly’s declaration proclaiming
India an independent sovereign republic. It resolved to draw the operational characteristics of government in independent India. Soon after Mountbatten’s partition plan was declared
on June 3, 1947, a separate constituent assembly was set up for Pakistan, reducing the Indian body’smembers to 299. Before Independence, legislation was
through the Central Legislative Assembly. On August 14,
1947 midnight, this was replaced by the constituent
assembly. It had 17 committees to discuss all aspects of
the new democracy. How often has the Constitution been
amended?The Constitution has been amended
100 times, making it the world’s most amended statute. The
first amendment came in 1951, a year after the Constitution
came into effect. The last one became effective this
May to make it possible for the India-Bangladesh land boundary
agreement to be implemented.The Constitution framers felt the process of amending it should be neither too easy, which would defeat the very purpose of having a Constitution, nor too difficult,
which would make it impossible for the document to keep
up with changing social values. For amending the Constitution,
a Bill can be introduced.in either House, but must win support of a majority of the total membership of each House (including vacancies,if any) and two-thirds of those present and voting (including“ayes” and “nays”, excluding those abstaining)
in each House. If the Bill fails to pass this test in one House, no joint sitting of Houses can be used to get it passed. Where the
proposed amendment impinges on the power of the states,
it must be ratified by at least half the state legislatures.
How long did it take to draft the Constitution? It took two years, 11
months and 17 days to compile the world’s longest national statute. The constituent assembly held 11 sessions over 165 days. On August 29, 1947,it set up a drafting committee under Ambedkar.
The constitution was adopted on November 26,1949. It came into force on January 26, 1950. That day the assembly became the provisional Parliament of India. This date was chosen to honour the
“purna swaraj” declaration of 1930
Which are the important amendments?
Some amendments have been significant. The first amendment in 1951 introduced Schedule 9 to protect laws that are on the face of it contrary to constitutionally guaranteed fundamental rights from judicial review. For example, a law allowing the state to forcibly acquire land for public good would seem to violate the right to
property, but placing it in Schedule 9 (as the 17th amendment
of 1964 did) was to put it beyond the reach of the courts. In 2007, the SC ruled that even laws under Schedule 9 are open to judicial review, if they violate the basic structure of the Constitution.
The Seventh Amendment of 1956 was to enable creation
of linguistic states and of UTs while abolishing the earlier classification of Class A, B, C and D states.The 39th and 42nd amendments passed during Emergency in the mid-70s were
controversial. The 39th placed restrictions on judicial scrutiny of the PM and the 42nd curtailed fundamental rights while introducing
the concept of fundamental duties. It added the words secular and socialist to the preamble that defines the republic’s nature.
The 43rd and 44th amendments passed after Emergency
reversed some of the excesses. Rajiv Gandhi’s tenure saw some crucial changes.The 52nd amendment of 1985 was to introduce an
anti-defection bill while the 61st in 1989 reduced voting age to 18 from 21. The 73rd and 74th amendments allowed creation of a third tier of government through local bodies in rural and urban areas. The 86th amendment of 2002 conferred the right to education.
coutesy – The Times of India 27 November 2015.