பாசெல், ஸ்விட்சர்லாந்து
சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனமான நோவார்டிஸ் தங்கள் நிறுவன ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு 26 வார மகப்பேறு விடுமுறை அளிக்க உள்ளது.
ஸ்விட்சர்லாந்து நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனம் நோவார்டிஸ் ஆகும். இந்த நிறுவனத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகள் உண்டு. இந்த நிறுவனம் கடந்த 1990 க்கு முன்பிருந்தே இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஜெனடிக்ஸ், புதிய மருந்துகள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பல மருந்துகளை தயாரித்து வருகின்றது.
இந்த நிறுவனம் புதிய பெற்றோர் கொள்கையை நேற்று அமுல்படுத்தியது. அதன் மூலம் மகப்பேறு, சுவீகாரம் எடுத்தல் மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுதல் ஆகிய இனங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் 26 வார மகப்பேறு விடுமுறை அளிக்க உள்ளது. இந்த விடுமுறை திட்டம் 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்கு மேல் பெற்றோராகும் ஊழியர்களுக்கு பொருந்தும்.
இந்த திட்டத்தின்படி தாய் மற்றும் தந்தை இருவரும் இதே நிறுவனத்தில் பணி புரிந்தால் ஆளுக்கு 13 வாரங்கள் வீதம் 26 வார விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தந்தை மட்டும் பணி புரிந்தால் அவருக்கும் 13 வார விடுமுறை அளிக்கப்படும். மக்கட்பேறு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்பதால் அதை முழுவதுமாக அனுபவிக்க இந்த விடுமுரை அளித்துள்ளதாக இந்நிறுவனத்தின் இந்திய தலைவர் சஞய் முர்தேஸ்வர் கூறி உள்ளார்.