மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் பெறுகின்ற 8வது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமாகும் இது.
இவர் கடந்த முறையும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், தற்போது உலகின் ‘நம்பர் 2’ வீரராக இருக்கிறார். இறுதிப் போட்டியில் இவரை எதிர்த்து மோதிய ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ‘நம்பர் 5’ அந்தஸ்தில் உள்ளவர்.
இறுதிப்போட்டியின் முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றிய ஜோகோவிக், அடுத்தடுத்த 2 செட்களையும் டொமினிக்கிடம் இழந்தார். ஆனால், பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிக், 4வது செட்டை 6-3 என்ற கணக்கிலும், 5வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் வென்று, கோப்பை தக்கவைத்துக் கொண்டார்.
இந்தப் பட்டத்துடன் சேர்த்து, இவர் பெறும் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது. இவருக்கு கோப்பையுடன் சேர்த்து ரூ.20 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.