’சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1970-களில் பிற்பகுதியில் நடக்கும் கதையான சார்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் சார்பட்டா பரம்பரை திரையில் காண்பித்திருந்தது.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டிஸில் ’வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச் செய்தியை பா.ரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.