பரிமலை

டிகர் திலீப்புக்கு சபரிமலையில் விஐபி தரிசனம் வழங்கியது குறித்து 4 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த போது அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில் கடந்த வெள்ளியன்று(06.12.2024) செய்தி வெளியானது.

தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும். அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார்., பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதாகவும் செய்தி வெளியானது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் இது குறித்து,

”நடிகர் திலீப் தரிசனம் செய்யும் போது மற்ற பக்தர்களுக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது உண்மைதான் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்த விவகாரம் தொடர்பாக நிர்வாக அதிகாரி, செயல் அலுவலர் மற்றும் 2 பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

என்று தெரிவித்துள்ளார்.