சென்னை: தமிழகத்தில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜிஎஸ்டியால் எதிர்பார்க்க வளர்ச்சியும் ஏற்படவில்லை, நிதியும் வர வில்லை என்று  தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழக சட்டபேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில்,  2022-23ஆம் ஆண்டிற்கான தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது பேசிய

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்தியஅரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி-யால் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்ற குற்றம் சாட்டியதுடன், அதனால் எந்தவொரு நிதியும் வரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். பாஜக அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு முதல் எதிரியாக இருந்தவர்தான் பிரதமர் மோடி என்பதை விளக்கியவர், தற்போது ஜிஎஸ்டி-ஐ சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டதுடன், ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பாக வரும் வதந்திகளக்கு மத்தியஅரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்தியஅரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றும் கூறினார்.

மேலும், அரசு பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசியவர்,  தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு, தேவைப்படும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

. அரசுப் பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு சார்பில் இன்னும் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.  அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் தேவையான பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, காலியாக இருக்கும் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.