பனாஜி:
பிரதமர் மோடி,, “ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுககள் செல்லாது என்று அறிவித்தது நாட்டின் நலனுக்காகவே. ஐம்பது நாட்கள் வாரை சிரமம் இருக்கும். மக்கள் தேசத்துக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
download-1
கோவாவில் விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் இன்று கலந்துகொண்டு பிரதமர் மோடி,  பேசியதாவது,:
““ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். கருப்பு மற்றும் கள்ளப்பணங்களை கண்டறிய பயன்படும். சிறு கொசுக்கள் கூட அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது.
எழுபது ஆண்டுகளாக கருப்பு பணம் வைத்திருந்தவர்கள்- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் – இன்று நான்காயிரம் ரூபாய்க்காக வரிசையில் நிற்கிறார்கள்.
கருப்பு பண முதலைகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் நாட்டுக்காக உயிரைவிடவும் தயாராக இருக்கிறேன்.
நான் அதிகாரத்தில் அமர்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. நாட்டுக்காக உழைக்கவே வந்திருக்கிறேன். நான் தவறு செய்தால் தண்டனை பெற தயாராக இருக்கிறேன்.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பது சிறந்த நடவடிக்கை. ஐம்பது நாட்களுக்கு சிரமம் இருக்கும். மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று மோடி பேசினார்.
“நோட்டு செல்லாது” அறிவிப்பின்போது, “மூன்று நாட்களில் நிலைமை சீரடையும்” என்று மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அறிவித்தன. பிறகு மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி, “மூன்று வாரங்களில் நிலைமை சீரடையும்” என்றார்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி, “ஐம்பது நாட்கள் சிரமம் இருக்கும் ” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.