டில்லி,

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் போஸ்டர்களில் ஜனாதிபதியின் படம் உபயோகப்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் அரசியல் கட்சியினருக்கு எச்சரித்து உள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கூட்டத்தில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தேர்தல் கமிஷனில் புகார் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

அரசியல் சாசனத்திற்கு எதிராக ஜனாதிபதி மற்றும், துனை ஜனாதிபதி ஆகியோரது புகைப்படம் அல்லது பெயர்களை அரசியல் கட்சிகள் தங்களது சுய லாபத்திற்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அனைத்து கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மாளிகைக்கும் அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.