டில்லி:
ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்தியா மட்டும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடுவது கிடையாது. மேலும் 4 நாடுகள் இதே தேதியில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.
கோங்கோ
இந்த வகையில் கோங்கோ குடியரசு இன்று 57வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாடு 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரான்ஸ் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்றது.
15ம் நூற்றாண்டில் பந்து மலை வாழ் மக்கள் மற்றும் போர்டியூகஸ் வர்த்தகர்கள் இடையிலான உறவுக்கு கோங்கோ ஆற்றுப் படுகையை ஐரோப்பிய வர்த்தகர்கள் பயன்படுத்தி வந்தனர். கோங்கோவில் நடந்து வந்த அடிமை வர்த்தகம் நீண்ட போராட்டம், வன்முறைக்கு பிறகு முடிவு வந்து சுதந்திரம் கிடைத்தது.
கொரியா
கொரியா தீபகர்பத்தில் இருந்து 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வட கொரியா, தென் கொரியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. தென் கொரியாவின் முதல் அதிபராக சைங்மேன் ரீயும், வட கொரியாவின் முதல் தலைவராக கிம் இன் சங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வகையில் கொரியா தனது 69வது ஆண்டு தேசிய விடுதலை நாளை இன்று கொண்டாடியது.
லீக்டன்ஸ்டைன்
ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இடையே உள்ள லீக்டன்ஸ்டைன் என்ற நாட்டில் ஜெர்மன் மொழியை மக்கள் பேசுகின்றனர். 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இதற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளை தேசிய தினமாக கொண்டாடுகின்றனர்.
பக்ரைன்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த பக்ரைனுக்கு 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிலேயர்களுக்கும் பக்ரைனுக்கும் இடையில் இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நட்பு ரீதியிலான உறவு தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஆகஸ்ட் 15ம் தேதியை பக்ரைன் சுதந்திர தினமாக கொண்டாடுவதில்லை. டிசம்பர் 16ம் தேதியை தான் அந்நாடு தேசிய தினமாக கொண்டாடுகிறது. முன்னாள் ஆட்சியாளர் இஸா பின் சல்மான் அல் கலிபா அரியனை ஏறிய தினத்தையே பக்ரைன் தேசிய தினமாக கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.