டெல்லி: மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தேசிய சுற்றுச்சூழல் தர நிர்ணய ஆய்வகத்துக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நமது விஞ்ஞானிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் வெற்றி கண்டு உள்ளனர்.

அவர்களால் நாடு மிகவும் பெருமை கொள்கிறது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தான் தொடங்க உள்ளது. மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

தரம், நம்பகத்தன்மையின் அடிப்படையில் நமது தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும். அளவை விட தரம் முக்கியமானது. ஆத்ம நிர்பர் பாரத்திற்கான தேடலில் நமது தரத்துடன், நமது தரமும் உயர வேண்டும் என்று கூறினார்.